ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில்,
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி முன் வைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பா.ஜ.க உறுபப்pனர் புர்னேஷ் மோடி ; சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற இந்த தீர்ப்பினால் ராகுல் காந்தி காந்தி மீண்டும் பதவியை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ராகுல் காந்தி வழக்கில் நீதி கிடைத்துத்துள்ளது எனவும் நீதித்துறையின் வலிமை ஜனநாயக்த்தின் விழுமியங்களை பாதுகாப்பதை தீர்ப்பு உறுதி செய்துள்ளது எனவும டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.