லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 6ஆவது லீக் போட்டியில், பி-லவ் கண்டி அணிக்கு தம்புள்ளை அவுரா அணி, 157 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கண்டி-பல்லேகல மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கண்டி அணியின் பந்துவீச்சில் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் மொஹமட் ஹஸ்னெய்ன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பி-லவ் கண்டி அணி இன்னமும் சில நிமிடங்களில் துடுப்பெடுத்தாடவுள்ளது.