முட்டையினை இறக்குமதி செய்தது போன்று பாலினையும் இறக்குமதி செய்யாதிருக்க ஏற்பாடு செய்யுங்கள் என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கரைச்சி வடக்கு கால்நடை கூட்டுறவாளர் சங்கத்தின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் “ தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலை காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டதை போன்று பாலையும் இறக்குமதி செய்யிதிருக்க கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உரிய தீர்வினை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.