மணிப்பூர் க்வாக்டா பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் க்வாக்டா பகுதியில் மீண்டும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.