18 வயதுக்குட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தைப் பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது.
அண்மைக்காலமாக சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையிலேயே கடந்த 3 ஆம் திகதி அந்நாட்டின் மத்திய சைபர்ஸ்பேஸ் விவகார ஆணைக்குழு ( Central Cyberspace Affairs Commission) இப்புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் படி 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு 40 நிமிடங்களுக்கும், 8-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு மணி நேரமும் , 16-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரமும், இணையத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.