மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதனை நினைவு கூரும் வகையிலும் மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ”மன்னார் முதல் மாத்தளை வரை ”என்ற தொனிப்பொருளில் நடைபவனியொன்று கடந்த ஜுலைமாதம் 28 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இதன் தொடர்ச்சியாக மிகிந்தலை நகரில் முன்னெடுக்கப்பட்ட நடைபயணத்தில் நாய் ஒன்று கலந்து கொண்டு சுமார் 16 km நடந்து வந்துள்ளமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த நாயை மக்கள் வரவேற்று வருவதாகவும் அதற்கு உண்ணுவதற்கு உணவு கொடுத்து வருவதாகவும் எனினும் அது உண்ண மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
@athavannews மலையக மக்களுக்காக 16 கிலோ மீட்டர் வந்த ஜீவன்! #news#news#upcountry #athavan