மணிப்பூர் விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு என மாநில அரசு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது,
இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து அரசாங்க துறைகளும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித்சிங் சுற்றறிக்கையொன்றையும் அனுப்பியுள்ளார்.
மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் போலியான செய்திகளை வெளியிடுவோர் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரங்கள் சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகளினால் தான் தீவிரமடைந்துள்ளதாகவும் மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித்சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.