இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் தெரிவித்துள்ளது.
சீனாவின் யுனான் மாகாணத்தின் நடைபெற்று வரும் 07வது சீன – தெற்காசிய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளர் வான் யீ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இறைமை, சுதந்திரம் மற்றும் தேசிய பெருமையை பாதுகாப்பதற்கு சீனா பலமாக ஆதரவளிப்பதாகவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு நிரந்தர ஆதரவு மற்றும் கடினமான காலங்களில் பயனுள்ள ஆதரவு அளித்தமைக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை இதன்போது தெரிவித்துள்ளார்.