அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியவசிய விஸ்தரிப்பு பணிகள் காரணமாக 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி (சனிக்கிழமை) மு.ப. 8 மணி முதல் 20ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி வரையில் நீர் விநியோகத் தடை அமுலாகவுள்ளது.
அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்சை, கோட்டே, கடுவலை மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ கொட்டிகாவத்தை, முல்லேரியா ,இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்த ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது