அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன், உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்துள்ளார்.
ஹங்கேரியாவில் நடைபெறும் 2023 தடகள சம்பின்ஷிப் போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
போட்டியை 10.65 செக்கன்களில் நிறைவு செய்த இந்த சாதனையானது மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் இவ்வருடம் வீராங்கனை ஒருவர் வௌிக்காட்டிய அதிகூடிய தேர்ச்சியாகும்.
கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்த ஜமைக்காவின் ஷெலீ-ஆன் ப்ரேஸர் இம்முறை போட்டியை 10.77 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தை பிடித்தார்.