நடிகர் ரஜினி காந்த் அண்மையில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்” ரஜினிகாந்த் யோகியின் காலில் விழுந்ததில் தவறில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ”உத்தரபிரதேச முதலமைச்சர் ஆத்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்.வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன” இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை ரஜினிகாந்திடம், இவ்விவகாரம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது ”வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் தான் செய்தேன் “என அவர் விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.