மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தனை மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்று (22) சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்கள், மேய்ச்சல் தரை தொடர்பாக பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரில் அவதானித்ததுடன், பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையிலல் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை அபகரித்துள்ள சிலர் கலந்துரைடாடலில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறைப்பிடிக்கப்படுள்ளவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.