மீண்டும் ஒரு இன கலவரத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெரும்பான்மைமையினத்தவர்களுக்கு ஏற்றவாறு பௌத்த நாட்டை உருவாக்கும் நோக்கத்துடனேயே தற்போதைய ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்னாசியாவில் முதலிடத்தில் இருந்த இலங்கை நாட்டை கடைசி நிலைக்கு நகர்த்தியது தற்போதைய அரசியல் வாதிகளின் செயறபாடுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் நிவர்த்தி செய்ய வேண்டுமானால் நியமான முறையில் ஆட்சி அமைக்ககூடிய ஒருவர் தலைவராக வரவேண்டும்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.