நேட்டோ அமைப்புக்கு எதிராக ஜேர்மனியில் பாரிய போராட்டமொன்று அந்நாட்டு மக்களால் நேற்று முன்தினம் (26) முன்னெடுக்கப்பட்டது.
தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ அமைப்பு நடத்தி வருவதாகவும், குறிப்பாக ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டுவருவதாகவும் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ”போர் வேண்டாம், அமைதியே வேண்டும், ஆயுதங்கள் அமைதியைத் தராது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இப்பேரணியில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பி அந்நாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் பொருளாதாரப் பாதிப்பு, பணவீக்கம் என அடுத்தடுத்து பல பிரச்சினைகளை ஜேர்மனி சந்தித்துவரும் நிலையில் உக்ரேனுக்கு ஜேர்மனி ஆயுத உதவி வழங்கி வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.