தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கில கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இவர்களுக்கு கற்கைநெறி வெற்றிகரமாக முடித்தமைக்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் ஆங்கிலப் பாடநெறியை கற்க பதிவுசெய்திருந்த போதிலும் இறுதியில் ஐந்து பேர் மாத்திரமே பயிற்சியை நிறைவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.