டீசல் விலை அதிகரிப்பை அடுத்து பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
டீசல் விலை 4 சதவீதத்துக்கு மேல் திருத்தப்பட்டால் மாத்திரமே பேருந்து கட்டணம் திருத்தம் செய்ய பேருந்து விலை சூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துக் கட்டணத் திருத்தம் குறித்த முடிவு இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஜூலை மாதம் பேருந்து கட்டண திருத்தம் நடைபெறுகின்ற போதும் இந்த ஆண்டு ஜூலை முதலாம் திகதி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.