உயர்மட்ட தலைமைத்துத்துடனான ஆட்சியொன்றை நாட்டில் ஸ்தாபிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காரியாலமட்டத்திலான தலைமைத்துவம் மற்றும் அரசியல் வஞ்சகம் இல்லாத முறையான தலைமைத்துவம் ஒன்று எரிபொருள் நிறுவனத்திற்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கும் அதேபோன்று இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
மின்சார சபை 15 துண்டுகளாக உடையும் வகையில் செயலாளர் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
15 துண்டுகளாக உடைத்து 15 நிறுவனங்கள் அமைத்தாலும் மின் கட்டணங்கள் குறையாது.
சினொபெக் வந்ததும் எரிபொருள் விலை குறைவடையும் என்று கூறிய கதையை போன்று தான் இந்த கதையும்.
மின் கட்டணங்களை குறைக்க வேண்டுமாயின் மின்சார சபையை முறையாக நிர்வகிக்க வேண்டுமாயின் உயர்மட்டத்திலான தலைமைத்துவம் அவசியம்.
அதற்கு தேவையான ஆட்சியை கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கு தேவையான மக்கள் தொகுதியினர் எம்முடன் இருக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.