நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான நவோமி ஒசாகா மீண்டும் சர்வதேச டென்னிஸுக்கு திரும்பப் போவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜப்பானிய முன்னாள் உலக நம்பர் வன் வீராங்கனையான 25 வயதாகும் நவோமி ஒசாகா, ஜனவரி மாதம் கர்ப்பமாக இருந்தால் டெனிஸில் இருந்து விலகியிருந்தார்.
டென்னிஸ் போட்டிகளை தான் தவறவிட்டுள்ளதாகவும் மீண்டும் அதற்குள் வர ஆர்வமாக இருப்பதாகவும் நவோமி ஒசாகா குறிப்பிட்டுள்ளார்.
2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் யுஎஸ் ஓபனையும், 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரையும் நவோமி ஒசாகா வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.