உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று மாலை சட்டமூலம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 58 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக முன்மொழியப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் ஜூலை மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்த சட்டமூலமும் நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.