இலங்கைக்கான EFF வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான மீளாய்வு குறித்த ஆராய்வு இன்று முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக 48 மாத நீட்டிக்கப்பட்ட 3 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கடந்த மார்ச் மாதத்தில் அங்கீகாரம் வழங்கியது.
இந்த ஆதரவு திட்டம் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான பொருளாதார தாக்கத்தை குறைத்தல், நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நிர்வாக மற்றும் வளர்ச்சி திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை, நிறைவேற்று சபையின் முடிவின் அடிப்படையில் சுமார் 333 மில்லியன் டொலர் நிதியுதவி முதற்கட்டமாக வழங்கப்பட நிலையில் அதற்கு இணங்கிய உடன்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவே சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் குழுவொன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளது.