நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் அட்டவணையை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
குறித்த கூட்டத் தொடர் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்கள் இடம்பெறவுள்ளன.
முதல் நாளில் நாடாளுமன்றத்தில் 75 ஆண்டு நிறைவை ஒட்டிய விவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன், முக்கியமான சட்டமூலங்கள் குறித்தும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடந்து, புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி பிரதமர் நரேந்திர மோடி புதிய கட்டடத்தை திறந்துவைக்க உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.