பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த சட்டமூலம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.