I.N.D.I.A. எனும் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதுகூட்டமானது இந்தியா நகரான Bhopal ல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் இந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதுடெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நேற்று ஆரம்பமானது.
மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு குறித்து இதன்போது ஆராயப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது,