தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதான தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பொத்துவிலில் இருந்து நல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்த திலீபனின் உருவம் தாங்கிய ஊர்தி மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தழிழ் மக்களின்; உரிமைக்காக போராடி உயிரிழந்த திலீபனின் திருவுருவப்படத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதுடன், எமது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், நாட்டிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விட்டதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் உள்நாட்டு விசாரணையின் மூலம் தீர்வு கிடைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.