அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை தனுஷ்க குணதிலக்க இன்று ஒப்புக்கொண்டார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த தனுஷ்க குணதிலக்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.