மன்னாரில் இன்று காலை 9 மணி முதல் பி.ப 6 மணி வரை 9 மணிநேர நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அந்தவகையில் முருங்கன் ,பள்ளிமுனை, எழுத்தூர், தோட்டவெளி,சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, வங்காலை, அடம்பன், திருக்கேதீஸ்வரம், நாகதழ்வு ஆகிய பகுதிகள் நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீர்வெட்டினால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவித்துள்ளதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.