இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
காலிஸ்தான் செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு ஆதரவாக கனடா அரசாங்கம் இந்திய அதிகாரியை வெளியேற்றதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை உருவாக்க கனடா அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் குற்றம்; சுமத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் வர்த்தக உறவுகளை துண்டிப்பதற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பயனலிக்கவில்லை எனவும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கனடாவில் சீக்கியர் தலைவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்தியாவுடன் வர்த்தக மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை கனடா அரசாங்கம் துண்டித்துள்ளது