மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில் அது பாலின நீதிக்கான புரட்சிகர மாற்றம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாநில சட்டப்பேரவைகள் மற்றும் தேசிய நாடாளுமன்றத்திலும் மகளிருக்கான இடஒதுக்கீடானது இப்போது வடிவம் பெறுகின்றதோடு இது பாலின நீதிக்கான தமது காலத்தின் மிகவும் புரட்சிகரமான மாற்றமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.