கோழி இறைச்சியின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது 1250 ரூபாயாக விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலையை 200 ரூபாயினால் குறைப்பதற்கு கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இல்லாவிடின் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பாக இன்று தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.