ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு தர உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க்கில் இடம்பெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனிலிருந்து கடத்தி செல்லப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.