தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,467 பொருட்களுக்கு இறக்குமதி பொருட்கள் தடை செய்யப்பட்டதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
மேலும், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வலுவான பொருளாதார சீர்திருத்தம் காரணமாக கடந்த வருடத்தில் இலங்கையில் பணவீக்கம் 66.7 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டில், அரசாங்கம் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை 1.8 பில்லியன் டொலர்களில் இருந்து 3.8 பில்லியன் டொலர்களாக வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதும், பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்திய 14 மணி நேர மின்வெட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களுக்கு நிலையான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்துளளது என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.