ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரின் விளக்கமறியல் காலம் நிறைவந்தடைந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை செய்ய மேலும் காலம் தேவை என முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதிபதி விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை அடுத்து மேலதிக விசாரணைக்காக சந்திரபாபு ராஜமுந்திரி சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.