சுவீடன் ஆயுதப்படைத் தளபதிக்கும் சுவீடன் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கடந்த 2 நாட்களாக சுவீடனில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வன்முறை தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரையில் பொறுப்புக் கூறாத நிலையில், இந்த பிரச்சினையை நிறைவு செய்வதற்கு இராணுவம் மற்றும் ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுவீடனின் முக்கிய நகரங்கள் சிலவற்றிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.