ஸ்பெயினில் பாடசாலையொன்றில் 14 வயதான சிறுவனொருவன் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினமான நேற்று தனது பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை எடுத்த குறித்த சிறுவன் அங்கிருந்த ஆசிரியரை விரட்டிச் சென்று அவரது கண்ணில் குத்தியுள்ளான். இதன் போது அவனைத் தடுக்க முயன்ற பிற ஆசிரியர்களையும், மாணவர்களையும் அச்சிறுவன் கத்தியால் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தில் 3 ஆசிரியர்களும் 2 மாணவர்களும் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை தாக்குதல் நடத்திய சிறுவனைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.