தமிழ் மக்கள் குறைந்தபட்ச நீதியைக்கூட பெறுமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செய்கைகளுக்கான திகதிகள் குறிக்கப்பட்டு கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டு செல்லவேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மயிலத்தமடு, மாதவனைக்கு கால்நடைகளை கொண்டு செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை நியமிப்பது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.