நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது என நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்கர்ட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் விசனம் தெரிவித்துள்ளதுடன், நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலும், எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியாத நிலையிலும தற்போது நாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் மாறுபட்டாலும் தொடர்ச்சியாக தமிழனம் விடுதலையடையும் வரையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.