30,000 பேர் வசிக்கும் பிரம்மாண்டக் குடியிருப்பொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவில் உள்ள 36 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் ஹாங்சோவில் உள்ள ‘ரீஜண்ட் இன்டர்நேஷனல்‘ என்ற 206 மீற்றர் உயரம் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பே இவ்வாறு வைரலாகி வருகின்றது.
S வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இக் கட்டிடமானது கடந்த 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் அதில் 20,000 பேர் வசித்து வந்துள்ளனர் எனவும், தற்போது குறித்த குடியிருப்பில் 36, 000 வசித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக்குடியிருப்பில் வசிப்பவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அக் கட்டித்திற்குள்ளேயே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இக்கட்டிடத்தில் உணவு விடுதி ,நீச்சல் குளங்கள், அழகு சிகிச்சை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், இணையத்தளமையம் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.