தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் பேருக்கு காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஈராக் பிரதமர் மொஹமட் அல்-சூடானியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைகளின் தோல்விக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என தன்னுடைய கருத்தோடு பலரும் உடன்படுவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்கும் ஐ.நா பொதுச் சபையின் தீர்மானங்களை புறக்கணித்து, பாலஸ்தீன மக்களின் நலன்களை கவனத்திற்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது என்றும் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.