உணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று (புதன்கிழமை) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து, பாடசாலை மாணவர்களுக்காக குறித்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது