கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50 இக்கும் மேற்பட்ட பொது மக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று, யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் ஒன்றுக் கூடிய உறவுகள், சுடரேற்றி, மலர் தூவி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிகழ்வில், நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் தமிழ்மணியினால் படுகொலை தொடர்பான நினைவு உரையொன்றும் ஆற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.