லெபனான்-இஸ்ரேல் எல்லையில் ஹெஸ்பொல்லாவின் தாக்குதல்களுக்கு ஈரான் உத்தரவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
காசா மீதான இராணுவ நடவடிக்கைகளை திசைதிருப்புவதற்காக ஹெஸ்பொல்லா பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
காசா மீது இஸ்ரேலின் குண்டு தாக்குதல் தொடர்ந்தால், பல முனைகள் திறக்கப்படும் சாத்தியம் உள்ளது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.