இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டயானா கமகே ஒரு பிரித்தானிய பிரஜை ஆகவே அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத்வினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையில இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் நிஷங்க பந்துல கருணாரத்ன, கேமா ஸ்வர்ணாதிபி மற்றும் ஏ. மரிக்கார் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.