அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவுமம் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிநாட்டுக் கடன்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.