ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த மேலும் இரண்டு பணய கைதிகள் இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
காசாவில் ஹமாஸின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு இஸ்ரேல் வைத்தியசாலையில் உடல்நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரம் பணய கைதிகளாக இருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு போதிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணய கைதிகளாக சிறை பிடித்து சென்ற இரு அமெரிக்க பிரஜைகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.