2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் இடையில் இன்று புனேவில் நடைபெறும் 30வது போட்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகின்றது.
நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை பெற்றுக்கொள்ள வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதேநேரம் வலிமையான சுளர்ப்பந்து வீச்சாளர்களோடு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.
இதற்கிடையில், லஹிரு குமார தொடையில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறியதை அடுத்து, துஷ்மந்த சமீர இன்று அணிக்குள் உள்வாங்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வெற்றி இலங்கையை முதல் நான்கு இடங்களுக்குள் கொண்டு செல்லாது என்றாலும் எதிர்வரும் வியாழக்கிழமை இந்தியா உடனான போட்டியை மேலும் வலுப்படுத்தும்.