இம்மாதம் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக தரையிலிருந்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் லெபனான் எல்லைக்குள் குண்டு தாக்குதலை நடத்தி ஏவுகணையின் மூலத்தைத் தாக்கியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹெஸ்பொல்லாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் வடக்கு நகறில் உள்ள வீட்டைத் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.