மெக்சிகோவைத் தாக்கிய ‘ஓடிஸ்’ சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஓடிஸ் சூறாவளியினால் மெக்சிகோவின் அகாபுல்கோ பகுதியானது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இச்சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருக்கிறது, சுமார் 36 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு சுமார் 273,000 வீடுகள், 600 உணவகங்கள் மற்றும் 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என்றும் ,பல வணிக வளாகங்கள் இடிந்துள்ளன என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அங்குள்ள பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதி முழுவதும் சுமார் 17,000 பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.