இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி’ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக கிண்ண தொடரை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்றிருந்தார்.
இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 30 ஆண் மற்றும் 30 பெண் என 60 பேர் இடம் பெற்றிருந்தனர்.
1956-ம் ஆண்டு முதல் பலோன் டி ‘ஓர் விருதை வருடந்தோறும் பிபா சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கி வருகிறது.
இதேநேரம் பெண்களுக்கான பலோன் டி’ஓர் விருது உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனை அய்டானா பொன்மதிக்கு Aitana Bonmati வழங்கப்பட்டது.