முதல்முறையாக ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரைப் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் வெளியேற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்திருந்தது.
இந்நிலையில், முதல்முறையாக ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. முதற் கட்டமாக 900 கிலோகிராம் கடல் உணவுகளை இறக்குமதி செய்த அமெரிக்கா, இராணுவ சிற்றுண்டிச்சாலை மற்றும் போர் கப்பல்களில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு அவற்றை பரிமாற திட்டமிட்டுள்ளது.
ஜப்பானின் மிகப் பெரிய கடல் உணவு இறக்குமதியாளரான சீனா கடந்தாண்டு ஒரு லட்சத்து 80,000 தொன் கடலுணவுகளை இறக்குமதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.