தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜீவராஜன் ராதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தந்தை அடிப்பதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மனமுடைந்த சிறுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் அனுப்பி வைக்கப்படவுள்ளது.